» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டோம்: தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:14:31 AM (IST)

சபாநாயகரை சந்திக்க மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதுகுறித்து ஆளுநருக்கும் கடிதம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆதரவை திரும்பப்பெறுவது குறித்து நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆனால் கடந்த 5 நாட்களாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என்று கூறினார்.குடியரசுத் தலைவர் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஆட்சியை கலைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் தினகரனின் வழியில் நாங்கள் நிற்போம் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஆட்சியை விட கட்சியே முக்கியம் எனவும் தங்க தமிழ்செல்வன் கூறினார். ஆளுநர் மீதான நம்பிக்கை போய்விட்டதாகவும் இனி ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். தமிழக அரசு பாஜகவுக்கு பயப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாஜக ஈபிஎஸையும் ஓபிஎஸையும் வைத்து நாடகமாடுவதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 04:21:06 PM | Posted IP 122.1*****

வாயாலே வடை சுடுறதை சுடலையிடம் கற்றுக்கொண்டார்கள் போல?

MakkalSep 14, 2017 - 11:57:45 AM | Posted IP 157.5*****

muthalil athai sei nankalum athai than ethirparkirom

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Tirunelveli Business Directory