» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

வியாழன் 14, செப்டம்பர் 2017 12:04:11 PM (IST)

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினகரன் அணி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக சபாநாயகரும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும் அரசு தலைமைக் கொறடாவுடன் கலந்து ஆலோசித்தனர் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இன்று (வியாழக்கிழமை) விளக்கம் அளிக்க கடைசி நாள் ஆகும். இதனால் விளக்கம் அளிக்க எம்.எல்.ஏக்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அணியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சசிகலா, தினகரனை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்தும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை, அவரை மாற்ற வேண்டும் என கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் 19 பேருக்கும் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மை இழந்த அரசின் கொறடா எங்களுக்குக் கட்டளையிட முடியாது என்று தினகரன் தரப்பில் பேட்டி அளித்தனர். 

ஆனால் கொறடா கடிதத்தை ஏற்று சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் இருவரும் சபாநாயகரை சந்தித்து தங்களுக்கு விளக்கமளிக்க மேலும் 15 நாள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்நிலையில் தினகரன் அணி எம்எல்ஏக்களுக்கான கெடு இன்றுடன் முடிவடையும் சூழலில் முதல்வர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory