» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: துணை சபாநாயகர் பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:36:33 PM (IST)

சட்டமன்றத்தில் எதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்? அ.தி.மு.க.வில் பிரச்சனை என்றால் ஸ்டாலினுக்கு ஏன் வியர்த்து வடிகிறது? என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. இப்போது அமைதியாக நல்லாட்சி நடந்துகொண்டிருக்கும்போது, அசம்பாவித சம்பவத்தை தூண்டிவிட்டு, அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். உடனே முதல்வர் ஆக வேணடும் என்ற ஆசை ஸ்டாலினுக்கு வந்துள்ளது.

சட்டமன்றத்தில் ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது தி.மு.க.வினர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும். அமளியில் ஈடுபட்டு சபாநாயகரை அவமதித்தனர். இதற்காக சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 96 எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சி நடத்திய தி.மு.க. எங்களைப் பார்த்து மைனாரிட்டி ஆட்சி என்கிறது. தற்போது 134 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது. 

இப்போது எதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. கட்சிக்குள் கருத்து வேறுபாடு என்பது சகஜம்தான். ஆனால், ஆட்சிக்கு ஏதாவது பிரச்சனை என்று வந்தால் வெளியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே வந்துவிடுவார்கள். இது எங்கள் உள்கட்சி பிரச்சனை. அ.தி.மு.க.வில் பிரச்சனை என்றால் ஸ்டாலினுக்கு ஏன் வியர்த்து வடிகிறது? இதில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு உள்ளது? இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.


மக்கள் கருத்து

பெரியசாமிSep 14, 2017 - 05:28:42 PM | Posted IP 61.2.*****

உங்களுக்கு எதுவுமே அவசியம் இல்லை. பதவி மட்டும் போதும். ஈரோட்டில் பார்த்தோமே உங்க நாற்காலி சண்டையை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory