» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 14, செப்டம்பர் 2017 5:12:22 PM (IST)

தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. மேலும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் அவர் விமர்சனம் செய்திருந்தார். இதனைக் கண்டித்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

மேலும் அம்பத்தூர் எஸ்டேட், பம்மல் உள்ளிட்ட இடங்களில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாஞ்சில் சம்பத் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதன் காரணமாக நாஞ்சில் சம்பத் தலை மறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி நாஞ்சில் சம்பத் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய தடை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory