» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெல்லி முதல்வரை சந்திக்கிறார் நடிகர் கமல்ஹாசன் : ஆம் ஆத்மியில் சேர திட்டம்?

வியாழன் 21, செப்டம்பர் 2017 10:36:20 AM (IST)ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசன் இன்று சந்திக்கவிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்க பரிசீலித்துக் கொண்டிருக்கிறார். தனது அரசியல் கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பகிரங்கமாகவும் பேசத் தொடங்கிவிட்டார். சொந்தமாக அரசியல் கட்சி தொடங்க யோசித்து வருவதாகவும் கடந்த வாரம் இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால், கமல்ஹாசனை, சென்னையில் இன்று சந்திக்கவிருக்கிறார்.

கேஜ்ரிவால் எது குறித்து கமல்ஹாசனை சந்திக்கவுள்ளார் என்பது பற்றி கட்சித் தரப்பு கூற மறுத்துவிட்டது. அரசியல் ரீதியான சந்திப்பாக இது இருக்கும் என்று மட்டும் கூறப்படுகிறது. கடந்த 2015ல், செப்டம்பர் மாதம், திரைத்துறைக்கு ஆதரவு வேண்டி கமல்ஹாசன், கேஜ்ரிவாலை, டெல்லி தலைமைசெயலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory