» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எத்தனை நதிகளில் நீராடினாலும் எடப்பாடி பழனிசாமியின் பாவம் தீராது: டி.டி.வி. தினகரன்

வியாழன் 21, செப்டம்பர் 2017 10:55:07 AM (IST)

எத்தனை நதிகளில் நீராடினாலும் எடப்பாடி பழனிசாமியின் பாவம் தீராது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மூழ்கி, மூழ்கி குளித்து இருக்கிறார். 

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் செய்த துரோகம் அவர் காவிரியில் மட்டும் அல்ல ராமேசுவரம், காசி என எத்தனை நதிகளில் நீராடினாலும் பாவம் போகாது. அவரும் அமைச்சர்களும் நீராடியதால் ஆற்றின் புனித தன்மை தான் கெடும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் தமிழக வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory