» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கு: நீதிமன்றத்தில் ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல்

வியாழன் 21, செப்டம்பர் 2017 12:45:41 PM (IST)

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனுவை தாக்கல்  செய்துள்ளார்.

அந்த மனுவில், பணப்பட்டுவாடா தொடர்பாக மாநில காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கே உள்ளது. பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory