» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு!

வியாழன் 21, செப்டம்பர் 2017 3:28:23 PM (IST)சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேரளா முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், முல்லைப் பெரியார் அணை உட்பட இரு மாநிலங்களிடையேயான பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்ப்போம். தமிழக, கேரளா மாநில மக்கள் சகோதர சகோதரிகள் என்பதால் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory