» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊழலுக்கு எதிரானவர்கள் எனது உறவினர்கள் : கெஜ்ரிவால் சந்திப்பு குறித்து கமல் விளக்கம்

வியாழன் 21, செப்டம்பர் 2017 4:24:58 PM (IST)ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.  

சமீபத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு முதல்வர் பிணராய் விஜயனை சந்தித்தார். இந்நிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்தித்து பேசியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசிக்கொண்டதாக கூறப்பட்டது. இருவரும் ஒருமணி நேரம்  ஆலோசனை நடத்தினர். 

பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் என்னை சந்திக்க கேட்டதையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.  ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும்  எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர். எனது தந்தை காலம் முதலே அரசியல்  தொடர்புடையவன் நான் இவ்வாறு அவர கூறினார்.

கெஜ்ரிவால் கூறுகையில், நடிகர் கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகராகவும், நல்ல மனிதனாகவும் உள்ளார்  . நான் அவருடைய  ரசிகன் .   ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டில் பெரும்பாலானோர்   மதவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்டு உள்ளனர். கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory