» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கந்துவட்டி குறித்த கேலி சித்திரம் வரைந்த பிரபல காா்ட்டூனிஸ்ட் பாலா திடீா் கைது

ஞாயிறு 5, நவம்பர் 2017 8:14:32 PM (IST)



கந்துவட்டி கொடுமை காரணமாக பாதிக்கப்பட்டு நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் 4 போ் தீக்குளித்து உயிாிழந்த சம்பவம் தொடா்பாக கேலி சித்திரம் வரைந்த பிரபல காா்ட்டூனிஸ்ட் பாலாவை தனிப்படை போலிசாா் இன்று கைது செய்தனா்.

நெல்லையைச் சோ்ந்த இசக்கிமுத்து என்பவா் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனது இரண்டு குழந்தைகள், மனைவி என குடும்பத்துடன் தீக்குளித்தாா். இந்த சம்பவத்தில் தீக்குளித்த அனைவருமே உயிாிழந்தனா்.

இது தமிழகம் முழுவதும் பலத்த அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடா்ச்சியாக "லைன்ஸ் மீடியா" என்னும் இணையதளம் நடத்தி வரும் காா்ட்டூனிஸ்ட் பாலா, முதல்வா் எடப்பாடி பழனிசாமி, நெல்லை ஆட்சியா், நெல்லை காவல் ஆணையா் ஆகியோரை விமா்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தாா். அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தாா். அந்த கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். மாறுவேடத்தில் வந்த 4 காவலர்கள் சென்னை கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து தரதரவென இழுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எங்கு கொண்டுச் செல்லப்படுகிறார் என்ற விவரம் தெரியவில்லை.


மக்கள் கருத்து

தமிழன்Nov 6, 2017 - 04:18:00 PM | Posted IP 175.1*****

கார்ட்டூன் வரைவதில் நாகரீகம் தேவை ...கீழ்த்தரமான எண்ணம் உள்ளவன்தான் இவ்வளுவு கீழ்த்தரமான கார்ட்டூன் வரைய முடியும்..... இவனை கைதுசெய்வதில் தவறேயில்லை ...........

சாமிNov 5, 2017 - 09:31:46 PM | Posted IP 117.2*****

சித்தரித்த விதம் உண்மையிலேயே தவறுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory