» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்? ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம்!

புதன் 15, நவம்பர் 2017 10:15:34 AM (IST)

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆளுநரின் இந்த ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து. ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் ஆய்வு செய்தார். கோவையில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில், தமிழில் வணக்கம் கூறி, தனது உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் ஆளுநர் கூறினார். ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் பாராட்டினார்.

மேலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும் என்று கூறி ஆய்வு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆளுநர். நேரில் சென்று ஆய்வு நடத்தியதால் தான் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் தூய்மையாக இருப்பது தெரியவந்தது என்றும் அவர் கூறினார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்தை தாம் பாராட்டுவதாகவும் ஆளுநர் பன்வாரிலால் கூறினார். அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை ஆய்வு என சர்ச்சைகள் வரிசைக் கட்டிய நிலையில் எதற்காக ஆய்வு என ஆளுநர் பன்வாரிலால் விளக்கமளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory