» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரும் டிச 31 ம் தேதிக்குள் ஆர்.கே நகர் தேர்தலை நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 21, நவம்பர் 2017 1:33:41 PM (IST)

வரும் டிசம்பா் மாதம் 31ம் தேதிக்குள் ஆா்.கே.நகாில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என்ற முந்தைய தீா்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தோ்தல் டிச. இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ரத்தான ஆா்.கே.நகா் தொகுதி தோ்தலை உடனடியாக நடத்தக் கோாி கே.கே.ரமேஷ் என்பவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் வருகிற டிசம்பா் 31ம் தேதிக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணைத்திற்கு உத்தரவிட்டது.

ஆா்.கே.நகரை பொருத்தவரையில், தொகுதியில் உள்ள போலி வாக்காளா்களை நீக்கிய பின்னரே தோ்தலை நடத்த வேண்டும் என்று ஆணைத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க.வைச் சோ்ந்த ஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கு மற்றும் இது சம்பந்தப்பட்ட மேலும் ஒரு வழக்கு என 2 வழக்குகள் தலைமை நீதிபதி அடங்கிய அமா்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

இது தொடா்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் முன்னிலையில், தோ்தல் ஆணையம் சாா்பில் ஆா்.கே.நகா் தொகுதியில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான போலி வாக்காளா்கள் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தொிவிக்கப்பட்டது.இதனைத் தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் முன்னரே கூறியிருந்தபடி டிசம்பா் 31ம் தேதிக்குள் ஆா்.கே.நகா் தொகுதியில் இடைத் தோ்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இடைத் தோ்தலை நடத்தி முடிக்கும் வகையில் தோ்தல் பணிகளை தொடங்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory