» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடத் தயாரா?- ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி

செவ்வாய் 21, நவம்பர் 2017 5:09:06 PM (IST)

உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட உத்திரவிட தமிழக ஆளுநர் தயாராக இருக்கிறாரா? என திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து திமுக ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சர்ச்சை குறித்து நேற்று (திங்கள்கிழமை), ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பாக ஆளுநருடைய முதன்மைச் செயலர் தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,  அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுதான் கோவையில்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில், இது சட்டத்தையே மதிக்காத ஒரு சூழ்நிலை என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால், அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் தான் பார்த்தேன் என்று அவர் சொல்கிறார். அப்படியெனில் நான் கேட்க விரும்புவது, இன்றைக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில், உடனடியாக அவர் சட்டமன்றத்தைக் கூட்ட உத்திரவிட வேண்டும், அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா?" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory