» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் தூக்குப் போட்டு தற்கொலை

செவ்வாய் 21, நவம்பர் 2017 7:53:53 PM (IST)

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் (40). இவர் சென்னையில் உள்ள அபிராமபுரத்தில் வசித்து வந்துள்ளார். இன்று மாலை இவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அசோக்கின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.போலீசார் மேற்கொண்டுள்ள விசாரணையின் முடிவில் அசோக்கின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory