» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்

சனி 25, நவம்பர் 2017 12:44:43 PM (IST)

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக வேட்பாளர் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று கூறினார். மேலும், ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் காங்கிரசைத் தொடர்ந்து பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்படும். இந்த இடைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். டிசம்பர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலையே வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory