» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்க குழித்துறையில் போராடும் மீனவர்கள் மறுப்பு

வியாழன் 7, டிசம்பர் 2017 8:22:01 PM (IST)

குழித்துறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அளித்த உறுதியினை ஏற்க மீனவர்கள் மறுத்து விட்டனர்.

ஓக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் காணமால் போயுள்ளனர்.இந்நிலையில் காணாமல் போனவர்கள் மீட்க கோரி குழித்துறை ரயில் நிலையத்தில் பொதுமக்கள்,மீனவர்கள்,பாதியார்கள் ஆகியோர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு குழித்து றையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.ஆனால் முதல்வரிடம் பரிந்துரைப்பதாக ஆட்சியர் அளித்த உறுதியை ஏற்க மீனவர்கள் மறுத்து விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory