» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்தை இயக்க நண்பருக்கு பயிற்சி அளித்த தற்காலிக ஓட்டுநர் : பயணிகள் அதிர்ச்சி!!

வியாழன் 11, ஜனவரி 2018 12:27:00 PM (IST)

உதகையில் அரசுப் பேருந்தை தனது நண்பர்களுக்கு இயக்க கற்றுத் தந்த தற்காலிக ஓட்டுநரால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. உதகை கிளை 1 கிளன்மார்கன் கிராமத்துக்கு தற்காலிக ஓட்டுநர் மூலம் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பேருந்தில் பயணம் செய்த தனது நண்பர்களுக்கும் பேருந்து இயக்க வாய்ப்பு அளித்துள்ளார். நண்பர்களை பேருந்து இயக்கச் சொல்லி, அவர்கள் அருகில் நின்று கொண்டு சொல்லிக்கொடுத்து வந்துள்ளார்.  ஒருவர் மட்டுமல்லாமல் பலரும் இவ்வாறு பேருந்தை இயக்க அந்த ஓட்டுநர் வாய்ப்பளித்துள்ளார். 

தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குவதால் அச்சத்துடனே பயணிக்கும் பயணிகள், ஓட்டுநர் பேருந்தை பயிற்சிக்கூடமாக மாற்றியதைக் கண்டு அதிர்ச்சியுடன் பயணித்துள்ளனர். இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (வர்த்தகம்) கணேசனிடம் கேட்டபோது, கடந்த 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு எடுத்து செல்லப்பட்ட அந்த பேருந்து, 9-ம் தேதி 12.30 மணிக்கு நிலையத்துக்குள் வந்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் பயணி ஒருவர் பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்தை ஓட்டிச் சென்ற காட்வின் இன்று பணிக்கு வரவில்லை. அவரது லைசென்ஸ் எங்களிடம்தான் உள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு பணி வழங்கப்பட மாட்டாது என்றார்.

டிக்கெட் வசூலில் முறைகேடு?

மேலும், தற்காலிக நடத்துநர்கள், வசூலாகும் உரிய தொகையை போக்குவரத்து கழகத்துக்கு சமர்ப்பிப்பதில்லை என்றும், இதனால் கடந்த ஒரு வார காலத்தில் ரூ.50 லட்சம் வரை போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பதிலளித்த கணேசன், டிக்கெட் பரிசோதகர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வசூலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போதைக்கு மக்களுக்கு சேவை செய்யவே பேருந்துகள் இயக்கப்படுகின்றனஎன்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory