» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்

வியாழன் 11, ஜனவரி 2018 12:42:18 PM (IST)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் முன், ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜராகினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அண்மையில் அமைத்தது.  இந்த ஆணையம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் விசாரணை ஆணையம் முன், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.  ஏற்கெனவே இவ்வாணயம் முன் ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 20ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory