» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பெற்றது என்ன?: மு.க ஸ்டாலின் கேள்வி - முதல்வர் பதில்!!

வியாழன் 11, ஜனவரி 2018 4:25:41 PM (IST)

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் தமிழக அரசு அதனால் பெற்ற நிதி என்ன? என்று மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக ஆளுநர் உரையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தான தகவல்களை இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பற்றுள்ளதோ? என்று எண்ணும் வகையில் ஆளுநர் உரையில், மத்திய அரசுக்கு அத்தனை நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக கூறும் நீங்கள் (அரசு), இதுவரை பெற்ற நிதி என்ன? என்று கேட்டார். 2015 மழை வெள்ளம், வர்தா புயல் நிவாரண நிதி என்று நீங்கள் கேட்ட நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளீர்களா?, மாநில அரசு கேட்டதை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதையே ஆளுநரின் உரை காட்டுகிறது என்று அவர் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை, எவ்வளவு நிதியை பெற முடியுமோ அதை போராடி பெற்று வருகிறோம் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory