» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் பஸ் முதலாளிகளை தமிழக அரசு ஊக்குவிக்கிறது: தமிழிசை குற்றச்சாட்டு

வியாழன் 11, ஜனவரி 2018 4:57:16 PM (IST)

தமிழக அரசு தனியார் பஸ் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை காசிமேடு இந்திராநகர் குடியிருப்பை சேர்ந்தவர் தேவன் (35). கடந்த மாதம் 20-ந்தேதி மீன்பிடிக்க சென்றார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் கட லில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர் தவறி விழுந்தார். இதுபற்றி காசிமேடு மீனவர்கள் துறைமுக போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மீனவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மீனவர் தேவன் வீடடிற்கு சென்று அவரது மனைவி இந்துமதி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார். ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கியதோடு அவரது 2 மகள்களையும் செல்வமகள் திட்டத்தில் சேர்க்க உறுதியளித்தார். பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து துறைகளும் செயலற்று கிடக்கின்றன. பொங்கலுக்கு முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்காதது ஏன்? தொழிற்சங்கங்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வழிவகை செய்ய வேண்டும். தமிழக அரசு தனியார் பஸ் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory