» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம்: போக்குவரத்து துறை!

வெள்ளி 12, ஜனவரி 2018 10:50:18 AM (IST)

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

கடந்த 8 நாட்களாக தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வந்தனர். இதனால் பொங்கல் முன்பதிகள் பாதிக்கப்பட்டது. மேலும் எப்போது விடப்படும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அதேபோல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

ஆனால் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இந்தமுறை முன்பதிவு கிடையாது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. காலதாமதம் காரணமாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக மக்கள் பயணம் செய்யலாம் எனப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, தாம்பரம் சானிடோரியம், வண்டலூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் சென்னையின் உட்பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory