» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது அப்பல்லோ!!

வெள்ளி 12, ஜனவரி 2018 12:19:11 PM (IST)

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை, விசாரணை ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவமனை இன்று தாக்கல் செய்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் விவரம், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவை யார் யார் சந்தித்தார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை தாக்கல் செய்யுமாறு விசாரணை ஆணையம் கேட்டிருந்தது.

இதற்கு இரண்டு முறை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், இன்று இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்களைக் கொண்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள், அதனை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தனர். வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு பெரிய பெரிய சூட்கேஸ்களை ஊழியர்கள் கொண்டு சென்று விசாரணை ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory