» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடன்குடி அனல்மின் நிலையம் கட்ட கடன் வழங்க ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ஒப்புதல்

வெள்ளி 12, ஜனவரி 2018 6:39:29 PM (IST)

உடன்குடி அனல்மின் நிலைய கட்டமைப்புக்காக ரூ. 10,453 கோடி கடன் வழங்க ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்தார்.

கடந்த 2011 ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலையம் கட்டப்படும் என அறிவித்தார். ஆனால் பல காரணங்களால் அப்பணி தொடங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தி யாளர்களை சந்தித்த போது கூறியதாவது 

உடன்குடி அனல்மின் நிலைய கட்டமைப்புக்காக ரூ. 10,453 கோடி கடன் வழங்க ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 2 அலகுகள் அமைக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் 1320 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory