» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மார்த்தாண்டத்தில் கந்துவட்டி மிரட்டலால் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தற்கொலை
வெள்ளி 12, ஜனவரி 2018 8:15:46 PM (IST)
மார்த்தாண்டம் அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டலால் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தற்கொலை செய்து காெண்டார்.
மார்த்தாண்டத்தை அடுத்த கன்னக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் (75), தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.ஜாண், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு படந்தாலுமூடு பகுதியில் ஒரு முந்திரி ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இதில், தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்திற்கு வட்டி செலுத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக பணம் கொடுத்தவர் ஜாணிடம் கூடுதல் வட்டி கேட்டதாக தெரிகிறது. நேற்றிரவு ஜாணின் மகன் வீட்டுக்கு வந்தபோது, கடன் கொடுத்தவர்கள் அவரை வழியில் தடுத்து நிறுத்தி பணத்தை கேட்டு மிரட்டினார்களாம்.இதுபற்றி ஜாணிடம் அவரது மகன் கூறி அழுதார். அப்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜாண் கூறி விட்டு அனைவரையும் தூங்கச் செல்லும்படி கூறினார்.
இன்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் பார்த்த வீட்டில் ஜாணை காணவில்லை. அவரை தேடியபோது அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த மரத்தில் ஜாண் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜாண் இறந்து கிடந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஜாண், எழுதிய சில கடிதங்கள் கிடைத்தன. அந்த கடிதத்தில் தனக்கு கந்து வட்டி மிரட்டல் இருந்ததாகவும், எனவே தற்கொலை செய்வதாகவும் எழுதி உள்ளார். மேலும் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.ஜாணுக்கு கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் அணி நிர்வாகி என கூறப்படுகிறது. அவர் யார்? எப்போது மிரட்டினார்? ஜாணின் சாவுக்கு அவர்தான் காரணமா? என்பது பற்றி மார்த்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிர்மலாதேவி விவகாத்தில் கல்லூரியில் நாளை விசாரணை : அதிகாரி சந்தானம் பேட்டி
வியாழன் 19, ஏப்ரல் 2018 7:21:34 PM (IST)

காவிரி விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்து: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
வியாழன் 19, ஏப்ரல் 2018 5:44:17 PM (IST)

நீட் தேர்வு மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன? சி.பி.எஸ்.இ அறிவிப்பு
வியாழன் 19, ஏப்ரல் 2018 5:11:01 PM (IST)

ஐபிஎல் போட்டிகளை தடுத்ததுபோல் சினிமாவையும் எதிர்ப்பீர்களா?: ஆர்.ஜே பாலாஜி கேள்வி
வியாழன் 19, ஏப்ரல் 2018 4:45:16 PM (IST)

செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் பாராட்டு
வியாழன் 19, ஏப்ரல் 2018 4:13:39 PM (IST)

நிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: விசாரணை அதிகாரி
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:56:33 PM (IST)
