» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பதி கோயில் தொடர்பான பேச்சுக்கு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார்: கனிமொழி எம்பி பேட்டி

சனி 13, ஜனவரி 2018 3:29:50 PM (IST)

திருப்பதி கோயில் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திருப்பதி கோயிலுக்கு எதுக்கு காவல்துறை பாதுகாப்பு என பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கனிமொழி கூறியதாவது, திருப்பதி கோயில் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துகளை பார்த்தால் அசாதாரண நிலை இருப்பதாகவே தெரிகிறது. நீதிபதிகள் புகார் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

நிஹாJan 16, 2018 - 12:30:14 PM | Posted IP 117.2*****

கனிமொழி பேசியது தவறுதான். உண்மையான நாத்திகவாதியாக இருந்தால், அவர் இப்படி சொல்லியிருக்க வேண்டும், "மத தலங்களுக்கு எதற்காக காவல் துறை பாதுகாப்பு?"

தமிழன்Jan 14, 2018 - 11:27:45 AM | Posted IP 157.5*****

இது எப்புடி இருக்குன்னா... ஒருத்தனை பிடித்து அடி அடின்னு அடித்துவிட்டு , பின்பு உனக்கு வழிக்கணும்னு அடிக்கல சும்மாதான் அடித்தேன் என்பதுபோல் உள்ளது .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory