» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்: கர்நாடக முதல்வருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

சனி 13, ஜனவரி 2018 5:39:29 PM (IST)

காவிரியில் இருந்து 7 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்; தமிழகத்துக்கான எஞ்சிய காவிரி நீரை 2 வாரங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் 21 டிஎம்சி தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் போதுமானதாக இல்லை” என்று தனது கடிதத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory