» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஞாயிறு 14, ஜனவரி 2018 4:20:59 PM (IST)

தமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது; கட்சியையும், ஆட்சியையும் யாராலும்  உடைக்கவும் கலைக்கவும் முடியாது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக ஊராட்சி செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, கூறியதாவது: "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும். 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகாவுக்கு கடிதம், அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன், பெரும்பாலான ஊராட்சிகள் செயலாளர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். 

சேலம் விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்கும் சேலத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தமிழக அரசு மதச்சார்பற்றது தான். முத்தலாக் சட்டமசோதாவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அகற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது அதிமுக எம்.பிக்கள் தான். அதிமுக எப்போதும் மதச்சார்பற்ற இயக்கம் தான். கட்சியையும், ஆட்சியையும் யாராலும் உடைக்கவும் முடியாது. கவிழ்க்கவும் முடியாது. யார் வேண்டுமாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதெல்லாம் நிலைத்து நிற்பதில்லை." கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கனவு பலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory