» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கலை முன்னிட்டு கட்சி தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி

ஞாயிறு 14, ஜனவரி 2018 4:25:36 PM (IST)

பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இன்று  கட்சி தொண்டர்களை சந்தித்தார். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, இன்று தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்தில் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory