» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

வெள்ளி 19, ஜனவரி 2018 2:02:11 PM (IST)

திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு 2017-ல் நடத்த மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று கூறிய நீதிபதி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அரசாணை எதுவும் வெளியிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். 

அத்துடன், அரசாணை வெளியிடப்படாமல் இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் ஆகாதா? என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் அரசாணை தொடர்பாக அரசிடம்  விளக்கம் பெற்று பதில் அளிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், இந்த ஆண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜனவரி 12-ம் தேதியே அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. எந்தெந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற தகவலும் அதில் இடம்பெ ற்றுள்ளது. இன்றைய விசாரணையின்போது அரசாணை தாக்கல் செய்யப்ப டாததால், ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின் அரசாணை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory