» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது

வெள்ளி 19, ஜனவரி 2018 2:11:24 PM (IST)

மாநகராட்சி வார்டு வேலைக்கு ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சி வார்டு வேலைக்கு, வரியை குறைத்து வசூலிக்க சம்பந்தம் என்பவரிடம், தஞ்சை மாநகராட்சி ஆணையர் ரூ.75 ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார்.இது குறித்து சம்பந்தம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையிடம் புகார் அளிக்க, அவர்களது திட்டப்படி, ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சம்பந்தம், மாநகராட்சி ஆணையர் வரதராஜனிடம் அளித்தார்.அப்போது அங்கே மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கையும் களவுமாக வரதராஜனை கைது செய்தனர். இதில், இடைத்தரகராக செயல்பட்ட நாகராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads







Tirunelveli Business Directory