» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்!!

வெள்ளி 19, ஜனவரி 2018 3:38:01 PM (IST)

ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான் என தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசுகையில், ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான். தினகரன் வெற்றி பெற முக்கிய நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த திட்டத்தை வகுத்தோம். அந்த திட்டம் நன்றாகவே பலனளித்துவிட்டது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், டிடிவி தினகரனை வெற்றி பெறச் செய்யத்தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் விடியோவை வெளியிடுமாறு வெற்றிவேலிடம் சொன்னதே தினகரன்தான் என்றும் அவர் பேசியுள்ளார். ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியிருந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தினகரன் ஆதரவாளர் ராஜசேகரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory