» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தது : அரசு அறிவிப்பு

வெள்ளி 19, ஜனவரி 2018 8:12:09 PM (IST)

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2011 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது பேருந்து கட்டணங்களை உயர்த்தினார். இந்நி லையில் தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண பேருந்தில் 10.கி.மீ பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்த ப்பட்டுள்ளது. அது போல் விரைவு பேருந்தில் 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆகவும், அதிநவீன சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆகவும் உயர்ந்துள்ளது. 

அது போல் சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் இருக்கும். நகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.19. வோல்வோ பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150. மாற்றியமைக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு வோல்வோ பேருந்து கட்டணம் 30 கி.மீ.க்கு ரூ.33 லிருந்து 51 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ஒருவன்Jan 20, 2018 - 10:56:37 AM | Posted IP 117.2*****

1 லட்சம் சம்பளம் விளங்காத திருட்டு MLA க்கள் ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory