» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ரூ. 96.12 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் : மாநகராட்சி ஆணையர் தகவல்

புதன் 14, பிப்ரவரி 2018 4:30:43 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ. 96.12  கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பெருமழை, வெள்ள நீரை அகற்ற பிரம்மாண்டமான மழைநீர் வடிகால் தூத்துக்குடி மாநகராட்சியில் 2015ம் ஆண்டு மாநகரின் வெளிபுறத்திலிருந்து வரப்பட்ட மழைவெள்ளதால் மாநகரின் வடக்கு பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, குறிஞ்சி நகர் பகுதிகள் பி & டி காலனி, மடத்தூர் ஆகியவை மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்தது. அதே போன்று தெற்கு பகுதிகளான ஜே.எஸ். நகர் முள்ளக்காடு ராஜுவ் நகர் ஆகிய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தூத்துக்குடி நகருக்குள் வெள்ளம் புகாதவாறு இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உத்திரவிட்டதின் பேரில் TNUIFSL நிறுவனம் மூலம் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள Suncon Engineer Pune என்ற நிறுவனத்தை நியமனம் செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் மாநகரில் வடிகால் அமைக்க மொத்தம் 3 கட்டங்களாக பணிகளை மேற்கொள்ள மொத்தம்ரூ.937.00 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பித்தது.

மேற்படி திட்டத்தின் ஆய்வறிக்கையின் பின்னர் முதற் கட்டமாக 6 பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் அவர்களால் சட்டப் பேரவையில் விதி எண். 110ன் கீழ் ரூ.76 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கீழ் காணும் 6 பணிக்கு 03.01.2018ம் தேதிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை (மா.ந.6) அரசாணை (டி) எண். 6ன் படி ரூ 96.12 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி வரப்பட்டுள்ளது.

பணிகள்

1) மதுரை தேசிய நெடுஞ்சாலை (45பி) யில் மேற்குப் பக்கம் அமையப்பெற்ற காலாங்கரை, கழுகுபாதை மற்றும் கழுதைபாதை ஆகிய மூன்று ஓடைகளில் இருந்து வரும் மழைவெள்ளநீரை வடக்குப் பக்கம் உள்ள பெரியபள்ளம் ஓடையின் வழியாக கடலில் வெளியேற்றுதல் பணி.

2)மதுரை தேசிய நெடுஞ்சாலை (45பி)யில் கிழக்குப் பக்கம் உள்ள காலாங்கரை கழுகுபாதை மற்றும் கழுதைபாதை ஆகிய மூன்று ஓடைகளில் இருந்து வரும் மழைவெள்ளநீரை சி.வ.குளத்தில் சேகரம் செய்தல் பணி.

3) சி.வ.குளம் தூர்வாறுதல், ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்.

4) சி.வ.குளத்தில் சேகரமாகும் உபரி நீரை மீளவிட்டான்சாலையில் வடிகால் அமைத்து அதன் வழியாக பக்கிள் ஓடையில் கலக்குதல் பணி.

5)செங்குளம் ஓடை வழியாக வரும் வெள்ளநீரை தேசிய நெடுஞ்சாலை (45பி) வழியாக தெற்கு பக்கம் உள்ள உப்பாத்து ஓடையில் கலக்குதல் பணி .

6) முள்ளக்காடு ஓடையினை அகலப்படுத்தி கட்டும் பணி.

மேற்படி பணிகளின் மூலம் மாநகரின் வெளிப்பகுதியில் இருந்து மாநகரின் உள்பகுதிக்குள் நுழையும் மழைநீரானது மாநகர பகுதிக்குள் தேங்காதவாறு சிரமமின்றி மழைநீர் வடிகால்கள் வாயிலாக பொது மற்றும் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி நேரடியாக கடலில் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி திட்டப்பணிகளை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர தூத்துக்குடி மாநகராட்சி மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory