» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி பலியான சோகம்!!

திங்கள் 12, மார்ச் 2018 12:34:34 PM (IST)



குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் -திவ்யா கணவன் மனைவி என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் விவேக்கின் நண்பர் தமிழ்ச்செல்வனும் உயிரிழந்தார். விவேக் துபாயில் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்காக விடுமுறையில் ஈரோடு வந்த விவேக்குக்கும் திவ்யாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

விடுமுறை முடிந்து விவேக் அடுத்த வாரம் துபாய் திரும்பவிருந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விவேக்கின் மனைவி திவ்யா, கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். திருமணமான ஒரு சில மாதத்திலேயே, புதுமணத் தம்பதி, காட்டுத் தீயில் சிக்கி பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து 8 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற நிலையில், 3 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory