» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனுமதி பெறாத மலையேற்றத்தால் உயிரிழப்பு : குரங்கணி தீ விபத்து குறித்து முதல்வர் விளக்கம்

திங்கள் 12, மார்ச் 2018 5:38:40 PM (IST)

முறையான அனுமதி பெறாமல் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்றதால்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, குரங்கணி காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மலையேற்றப் பயிற்சிக்கு முறையான அனுமதி பெற்று உரிய வழிகாட்டிகளுடன் செல்ல வேண்டும். அனுமதி பெறாமல், குரங்கணி மலைப் பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றதே துயர சம்பவத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

கோடைக்காலத்தில் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை. அரசின் அனுமதி பெற்று அல்லது தெரிவித்துவிட்டு சென்றால்தான் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். வருங்காலத்தில் அனுமதி பெறாமல் மலையேற்றத்துக்குச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்குச் சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.  தற்போது குற்றம்சாட்டும் நேரமல்ல. காட்டுத் தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய நேரம். இன்று மாலை மதுரை சென்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory