» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திங்கள் 12, மார்ச் 2018 6:48:09 PM (IST)

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், குரங்கணி மலையில் மலையேற்றப் பயிற்சியின் போது ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா ரு.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.

காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக த்துக்கும், மருத்துவத் துறையினருக்கும் உத்தர விட்டுள்ளேன். 

காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், தீயில் சிக்கி லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory