» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து முதல்வர்,துணை முதல்வர் ஆறுதல்

திங்கள் 12, மார்ச் 2018 8:04:19 PM (IST)

குரங்கணி தீ விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முதலமைச்சர் ஈபிஎஸ், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனை களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் முன்னெ டுக்கப்பட்டு வருகிறது. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், அழைத்துச் சென்றவர்கள் என விசாரணை விரிவடைகிறது. 

இன்று (மார்ச் 12 ம் தேதி) மாலை தீ விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதில் அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆறுதல்.கூறினார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory