» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உப்பளங்களில் மழை நீர்: பல கோடி வருவாய் இழப்பு - உப்பு உற்பத்தியாளர்கள் கவலை!!

புதன் 14, மார்ச் 2018 12:03:41 PM (IST)தூத்துக்குடியில்  கோடை காலத்தில்  திடீரென கனமழை பெய்ததால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது. 

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி விளங்கி வருகிறது. வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரை சுமார் 25ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. ஜனவரி முதல் அக்டோபர் வரை உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறும். தற்போது உப்பு உற்பத்தியாகி, வாறும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென கனமழை பெய்ததால், உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் இதுவரை நடைபெற்ற பணிகள் அனைத்து பாழாகிவிட்டதாகவும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் தனபால் கூறியதாவது: உப்பு உற்பத்தியாகி அதனை அறுவடை செய்யும் காலத்தில், பெய்த கனமழையால் உப்பளங்களில் உள்ள பாத்திகளில், தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை வடித்து விட்டு, உப்பளங்கள் காய்வதற்கு 3 வாரங்கள் வரை ஆகும். உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால், 50 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, மழை நீர் வடிந்து, மீண்டும் உப்பு உற்பத்தியை துவக்க, குறைந்தபட்சம் 3 வாரங்கள் ஆகும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உப்பள தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory