» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆறுமுகாமி விசாரணை ஆணையத்தில் கூறியது என்ன ? : மருத்துவர் சிவகுமார் விளக்கம்

புதன் 14, மார்ச் 2018 2:08:23 PM (IST)

மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியதாக மருத்துவர் சிவக்குமார் கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதா கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி காலமானார்.அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர், மருத்துவர் என ஒவ்வொருவராக ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். இதில் இன்று ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது,ஆணையத்தின் கேள்வி களுக்கு பதலளித்தேன். மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியது.ஆனால்தேதி குறிப்பிடவில்லை. ஆணை யத்தில் இன்று எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்றும் மருத்துவர் சிவக்குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory