» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

புதன் 14, மார்ச் 2018 3:57:48 PM (IST)

பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு, ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு, உலகம் முழுவதும் இருந்து பலரும் தங்கள் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் ட்விட்டரில் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். "திரு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory