» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 14, மார்ச் 2018 4:28:50 PM (IST)

பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 நபர்களும் இன்று விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது அண்ணன் கலாநிதி மாறன் உட்பட 7 நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுச் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து தங்கலை விடுவிக்க வேண்டும் என்று 2017 அக்டோபர் மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு ஒன்று 7 பேர் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையினைச் சிபிஐ சிறப்பி நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இவர்களது சார்பாக டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். ஆனால் சிபிஐ தரப்பு 7 நபர்களையும் விடுவிக்கக் கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்த நிலையில் மார்ச் 14ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பிற்பகல் 2:30 மணி அளவில் பிஎஸ்என்எல் தொலைப்பேசி இனைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பு வெளியானதை அடுத்து மாலை 3 மணி அளவில் சன் நெட்வொர்க் பங்குகள் 19.20 புள்ளிகள் என 2.13 சதவீதம் உயர்ந்து 919 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory