» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பொழிவு : தென் தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை!!

புதன் 14, மார்ச் 2018 4:37:15 PM (IST)கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தென் கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. மினிகாய் தீவுகளுக்கு 320 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து சென்று வியாழக்கிழமை முதல் வலுவிழக்கக்கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த இரு தினங்களில், குமரி கடற்பகுதியில் மணிக்கு 40கி.மீ முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும். இந்த இரண்டு தினங்களிலும் குமரி மாவட்ட மீனவர்கள், கேரளா, லட்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory