» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?‍ - ஹெச்.ராஜா கிண்டல்

புதன் 14, மார்ச் 2018 5:00:38 PM (IST)

"மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?‍" என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கிண்டல் அடித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காக கிடைக்கும் இ-மெயில் முகவரிகளுக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார்" எனக்கூறி தமிழிசை கிண்டலடித்தார்.

இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இ-மெயில் அனுப்பப்படுவதாக அக்கட்சி விளக்கம் அளித்தது. மேலும், தமிழிசை தன்னுடைய செல்பேசி எண், ஆதார் எண் விவரங்களுடன் கட்சியில் சேர பதிவு செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், அதனை வெளியிட விரும்பவில்லை எனவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மக்கள் நீதி மய்யத்தில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான்" என குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா, அதற்கான படங்களையும் இணைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory