» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: துணை முதல்வர் ஓபிஎஸ் மீது திமுக புகார்

புதன் 14, மார்ச் 2018 5:48:33 PM (IST)

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் பலவற்றை வாங்கி குவித்துள்ளதாக, துணை முதல்வர் ஓபிஎஸ் மீது  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநரிடத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக துணைமுதவல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், "தமிழகத்தின் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியலுக்கும், வருமான வரித்துறையில் செலுத்தி உள்ள சொத்துக்களின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் மனைவி, மற்றும் குடும்பத்தினர் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும் வருமான வரித்துறைக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மீதான இந்த புகார் துவக்கம் தான் எனவும், இன்னும் பல அதிமுகவினர் மீது பகீர் புகார்களை வெளியிட திமுக திட்டமிட்டு உள்ளதாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory