» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை; கர்நாடகாவின் தூதுவர்: ரஜினி மீது பாரதிராஜா கடும் விமர்சனம்
திங்கள் 16, ஏப்ரல் 2018 5:40:31 PM (IST)
தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள் என ரஜினிகாந்தை பாரதிராஜா கடும் விமர்சனம் செய்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது.
இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்? தமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு முடிய வேண்டாம். நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா? மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா? இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?: படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை. காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என கடும் விமர்சனம் செய்து உள்ளார்.
மக்கள் கருத்து
RajiniApr 18, 2018 - 10:23:18 AM | Posted IP 202.1*****
Definitely, East or west my home is the best.
kamalahasanApr 17, 2018 - 11:43:16 AM | Posted IP 172.6*****
வாழ்த்துக்கள் பாரதிராஜா அவர்களை ..
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகம் : மாவட்டஆட்சியர் பேட்டி
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:22:51 PM (IST)

உலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாக பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி : கனிமொழி எம்.பி. பேச்சு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:32:02 AM (IST)

பாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 8:48:25 PM (IST)

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி
சனி 21, ஏப்ரல் 2018 5:42:10 PM (IST)

கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது
சனி 21, ஏப்ரல் 2018 5:10:14 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு
சனி 21, ஏப்ரல் 2018 4:48:03 PM (IST)

சாமிApr 18, 2018 - 11:38:10 AM | Posted IP 141.1*****