» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கேபிள் டிவி ஒளிபரப்பு நாளை 3 மணி நேரம் நிறுத்தம்

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:54:21 PM (IST)

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை (ஏப். 17) கேபிள் டிவி ஒளிபரப்பை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நிறுத்த தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது "மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், மதுரையில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory