» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:33:07 AM (IST)
நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆடியோ காட்சி மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த மேலிடத்திற்கு இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று தீரன் சின்னமலையின் 262ம் பிறந்தநாளை தொடர்ந்து கிண்டியில் அவரது உருவசிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளதாக கூறினார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசராணை நடத்த வேண்டும் என்றும், அப்போது தான் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகம் : மாவட்டஆட்சியர் பேட்டி
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:22:51 PM (IST)

உலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாக பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி : கனிமொழி எம்.பி. பேச்சு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:32:02 AM (IST)

பாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 8:48:25 PM (IST)

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி
சனி 21, ஏப்ரல் 2018 5:42:10 PM (IST)

கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது
சனி 21, ஏப்ரல் 2018 5:10:14 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு
சனி 21, ஏப்ரல் 2018 4:48:03 PM (IST)
