» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பார்க்கவே இல்லை : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 12:05:35 PM (IST)
"மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

ஆனால் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதவை நான் மருத்துவமனையில் ஒரு நாள் கூட பார்க்கவில்லை என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார். அந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஜெயலலிதாவை நான் ஒருமுறை கூட பார்க்கவில்லை. எனது மனைவி கூட அம்மாவை பார்த்தீர்களா? என்று தினமும் கேட்பார். எனக்கு பொய் சொல்ல மனம் வராது என்பதால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று தெரிவித்தேன் என்றார்.
இப்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். இதில் நேற்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், ஜெயலலிதாவின் செயலாளர் வெங்கட ரமணன், போயஸ்கார்டனில் உள்ள சமையல்காரர் ராஜம்மாள் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். இவர்களிடமும் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஜெயலலிதா பற்றி ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவே இல்லை என்று கூறி இருக்கிறார். எனவே அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை எந்தெந்த அமைச்சர்கள் பார்த்தார்கள்? யார்- யார் பார்க்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகம் : மாவட்டஆட்சியர் பேட்டி
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:22:51 PM (IST)

உலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாக பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி : கனிமொழி எம்.பி. பேச்சு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:32:02 AM (IST)

பாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 8:48:25 PM (IST)

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி
சனி 21, ஏப்ரல் 2018 5:42:10 PM (IST)

கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது
சனி 21, ஏப்ரல் 2018 5:10:14 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு
சனி 21, ஏப்ரல் 2018 4:48:03 PM (IST)
