» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்டது குறித்து பொது நலன் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

புதன் 16, மே 2018 12:22:44 PM (IST)

எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்டது குறித்து பொது நலன் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞரிடம் உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

எஸ்.வி. சேகர் வீட்டின் மீது கல் எறிந்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர் பிரேம் ஆனந்திடம், எஸ்.வி. சேகர் வீடு மீது கல் எறிந்தது தொடர்பாக நீங்கள் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள். நீதிமன்றத்தை நாட முடியாதவர்களுக்காகத்தான் பொது நலன் வழக்கு தொடர முடியும். 

எஸ்.வி. சேகர் என்ன நீதிமன்றத்தை நாட முடியாதவரா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், 3வது நபர் எதன் அடிப்படையில் பொது நலன் வழக்குத் தொடர முடியும் என்பது வழக்கறிஞராக நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்று பொது நலன் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory