» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 2 ல் தோற்ற மாணவர்கள் கலங்க வேண்டாம் : அமைச்சர் பாென்னார் அறிவுரை

புதன் 16, மே 2018 1:08:16 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை என மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துகள். வெற்றி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பில் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றிபெற்று தங்கள் துறையில் பல சாதனைகளை படைத்து நாட்டுக்கும், வீட்டுக்கும், தங்களது ஊருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்த வித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory